Friday, July 19, 2019

*ஐசிசி. கிரிக்கெட்டில் புதிய மாற்றம்*

ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரருக்கு களம் இறங்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீசலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் இதுவரை ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்த வீரர்கள் மட்டுமே பேட்டிங் மற்றும் பவுலிங் பணியை செய்ய முடியும். ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்து ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு வெளியேறினால், அவர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதாக கருதப்படும். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்யலாம். ஆனால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது.

இதனால் காயப்படும் வீரர் இடம் பிடித்துள்ள அணிக்கு சிக்கல் ஏற்படும். இக்கட்டான நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அவரது பங்களிப்பு இல்லாமல் போவதால் அந்த அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.
இதனால் தலையில் அடிபட்டு பயங்கர அதிர்ச்சியுடன் பேட்டிங் செய்ய முடியாத நிலைமை ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரருக்கு ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கும் வீரரை பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல் பந்து வீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நீண்ட நாட்களாக இதுகுறித்து பரிசீலனை செய்து வந்த ஐசிசி இன்று அனுமதி அளித்துள்ளது. இது ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஐசிசி*
*72,000 காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.*

*காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 3000 ஆக உயர்வு - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.*
*கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.*

*முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கெடு.*
*அருணாச்சல பிரதேசத்தில் நிலஅதிர்வு - ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு.*
*கர்நாடகா : கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறப்பு.*
*வேலூர் தொகுதியில் 31 மனுக்கள் ஏற்பு, 19 மனுக்களை தள்ளுபடி-தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம்.*

*ஐசிசி. கிரிக்கெட்டில் புதிய மாற்றம்* ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரருக்கு களம் இறங்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டால், அவருக்...